கிரிக்கெட்
211 ரன்கள் எடுத்தும் தோல்வி அடைந்த இந்திய அணி: தெ.ஆ அபார பேட்டிங்
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இன்று டெல்லியில் நடைபெற்ற முதலாவது டி20 டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 212 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 19.1 ஓவர்களில் 212 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது
தென்ஆப்ரிக்க அணியின் வென் டர் சன் 75 ரன்களும் டேவிட் மில்லர் 64 ரன்களும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது