சினிமா செய்திகள்
ரூ.10 கோடி பட்ஜெட் படம் ரூ.3 கோடி கூட வசூல் இல்லை: ‘தலைவி’ நடிகைக்கு ஏற்பட்ட சோகம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘தலைவி’ என்ற திரைப்படத்தில் நடித்த கங்கனா நடித்த ’தக்கட்’ திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் 3.5 கோடி மட்டுமெ வசூல் ஆகியுள்ளது என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏஜென்ட் அக்னி என்ற கேரக்டரில் கங்கனா ரணவத் நடித்துள்ள திரைப்படம் ’தக்கட்’ . இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அர்ஜூன் ராம்பால் வில்லனாக நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்பட்ட நிலையில் கடந்த 20ஆம் தேதி இந்த படம் நாடு முழுவதும் ரிலீஸானது.
முதல் காட்சி முடிந்த உடனே இந்த படத்திற்கு ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்தன. இதனை அடுத்து இந்த படத்தின் வசூல் பெரும் வீழ்ச்சி அடைந்தது. ரிலீஸ் ஆன எட்டாவது நாளில் இந்தியா முழுவதும் இந்த படத்தின் மொத்த வசூல் 4,000 ரூபாய் என்ற தகவல் படக்குழுவினர்களுக்கு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவான திரைப்படங்களிலேயே இந்த படம் தான் மிக அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ரூபாய் 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் தற்போது வரை 3.53 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாகவும் இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு இந்த படத்தால் மிகப்பெரிய நஷ்டம் என்றும் கூறப்படுகிறது.