இந்தியா
ஊருக்கே வேலை தரும் naukri.com ஓனரின் முதல் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா?
naukri.com என்ற இணையதளத்தில் பதிவு செய்தால் உடனடியாக வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை இளைஞர்கள் மத்தியில் இருக்கும் நிலையில் அந்த இணையதளத்தின் நிறுவனர் முதல் மாத சம்பளம் வெறும் ஆயிரம் ரூபாய் என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது
இது குறித்து naukari.com நிறுவனர் சஞ்சய் என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் தனக்கு முதல் முதலாக வேலை கிடைத்த அப்பாயின்மென்ட் ஆர்டரை பதிவு செய்துள்ளார்
அதில் கடந்த 1984ஆம் ஆண்டு இந்த அப்பாயின்ட்மெண்ட் லேட்டர் அவருக்கு கிடைத்ததாகவும், அதில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் சம்பளம் என்றும் நிர்வாக பயிற்சியாளர் பணி அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சம்பளம் எனக்கு குறைவாக இருந்தாலும் நான் நிறைவாக வாழ்ந்தேன் என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். naukri.com நிறுவனரின் இந்த பதிவு தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது
My first job pic.twitter.com/fzlfj9A0Yl
— Sanjeev Bikhchandani (@sbikh) May 2, 2022