Connect with us

வணிகம்

ஜிஎஸ்டி வரி வசூல் இதுவரை இல்லாத அளவுக்கு 1.68 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. தமிழ்நாட்டில் எவ்வளவு தெரியுமா?

Published

on

2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வரி வருவாய் 1,67,540 கோடி ரூபாய். இதில் மத்திய ஜிஎஸ்டி வரியாக 33,159 கோடி ரூபாயும், மாநில ஜிஎஸ்டி வரியாக 41,793 கோடி ரூபாயும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரி 81,939 கோடி ரூபாயும் (இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மூலம் 36,705 கோடி ரூபாயும், வசூல் மற்றும் பொருட்கள், மற்றும் அதன் தீர்வை வரியாக 857 கோடி ரூபாய் உட்பட) தீர்வைத் தொகையாக 10,649 கோடி ரூபாய் அடங்கும்.

2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் முன்னெப்போதையும் விட அதிகமாகும். இது கடந்த மார்ச் மாதம் வசூலான ஜிஎஸ்டி தொகையான 1,42,095 ரூபாயை விட 25,000 கோடி ரூபாய் அதிகம்.

ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரியிலிருந்து மத்திய ஜிஎஸ்டிக்கு 33,423 கோடி ரூபாயும், மாநில ஜிஎஸ்டிக்கு 26,962 கோடி ரூபாயும் மத்திய அரசு விடுவித்துள்ளது.

2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தின் ஜிஎஸ்டி வருவாயை விட 20% அதிகமாகும். இந்த மாதத்தில், சரக்குகளின் இறக்குமதியின் வருவாய் 30% அதிகரித்துள்ளது. உள்நாட்டு பரிவர்த்தனையின் (சேவைகளின் இறக்குமதி உட்பட) வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தில் இருந்த வருவாயை விட 17% அதிகமாகும்.

ஜிஎஸ்டி வசூல் நிலவரம்

முதல் முறையாக மொத்த ஜிஎஸ்டி வசூல் 1.5 லட்சம் கோடி ரூபையைத் தாண்டியுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் உருவாக்கப்பட்ட மொத்த மின்வழி சீட்டுகளின் எண்ணிக்கை 7.7 கோடியாகும். இது பிப்ரவரி மாதத்தில் உருவாக்கப்பட்ட 6.8 கோடி மின் – வழிச்சீட்டுகள் விட 13% அதிகமாகும், இது வணிக செயல்பாடுகளின் விரைவான மீட்சியை பிரதிபலிக்கிறது.

இது வரி நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் விளைவாக,வரி செலுத்துவோரை சரியான நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்வது தொடர்பான ஜி எஸ் டி நடைமுறைகளின் தெளிவான முன்னேற்றத்தை எடுத்துக் காட்டுவதாக உள்ளது. தரவு பகுப்பாய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்ட தவறு செய்யும் வரி செலுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

தமிழ்நாட்டில் சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது நடப்பு ஆண்டு ஏப்ரல் மாதம் ஜிஎஸ்டி வசூல் 10 சதவீதம் அதிகரித்து 9,724 கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளது. 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8,849 கோடி ரூபாய் வசூலை தமிழ்நாடு செய்து இருந்தது.

மாநிலம் வாரியாக ஜிஎஸ்டி வசூல் நிலவரம்

மாநிலம்ஏப்ரல் 2021ஏப்ரல் 2022வளர்ச்சி
ஜம்மு காஷ்மீர்50956010%
ஹிமாச்சல பிரதேசம்7648177%
பஞ்சாப்1,9241,9944%
சண்டிகர்20324922%
உத்தரகாண்ட்1,4221,88733%
ஹரியானா6,6588,19723%
டெல்லி5,0535,87116%
ராஜஸ்தான்3,8204,54719%
உத்தரப்பிரதேசம்7,3558,53416%
பீகார்1,5081,471-2%
சிக்கிம்2582642%
அருணாச்சல பிரதேசம்10319690%
நாகாலாந்து526832%
மணிப்பூர்10369-33%
மிசோரம்5746-19%
திரிபுரா110107-3%
மேகாலயா20622710%
அசாம்1,1511,31314%
மேற்கு வங்காளம்5,2365,6448%
ஜார்கண்ட்2,9563,1005%
ஒடிசா3,8494,91028%
சத்தீஸ்கர்2,6732,97711%
மத்திய பிரதேசம்3,0503,3399%
குஜராத்9,63211,26417%
டாமன் மற்றும் டையூ10-78%
தாத்ரா மற்றும் நகர் ஹவேலி29238130%
மகாராஷ்டிரா22,01327,49525%
கர்நாடகா9,95511,82019%
கோவா40147017%
லட்சத்தீவு43-18%
கேரளா2,4662,6899%
தமிழ்நாடு8,8499,72410%
புதுச்சேரி16920621%
அந்தமான் நிக்கோபார் தீவுகள்618744%
தெலுங்கானா4,2624,95516%
ஆந்திரப் பிரதேசம்3,3454,06722%
லடாக்314753%
பிற பிரதேசங்கள்15921636%
ஒன்றிய அரசு அதிகார வரம்பு14216717%
மொத்தம்1,10,8041,29,97817%
author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்12 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு12 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா12 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு12 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்12 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்13 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்