சினிமா செய்திகள்
மீண்டும் ஒரே படத்தில் நயன்தாரா – சமந்தா: இந்த முறை அக்கா-தங்கச்சி!
நயன்தாரா மற்றும் சமந்தா இணைந்து நடித்த ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் இந்த படம் தோல்வி படம் இல்லை என்றும் போட்ட முதலீட்டை எடுத்து விட்ட சுமாரான லாபம் கொண்ட படம் என்றும் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள ‘அஜித் 62’ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நாயகி மற்றும் நாயகியின் தங்கை கேரக்டரில் நயன்தாரா மற்றும் சமந்தாவை நடிக்க வைக்க விக்னேஷ் சிவன் திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது .
சமந்தா தன்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் இருந்தால் இந்த படத்தில் கண்டிப்பாக நடிப்பேன் என்று கூறியிருப்பதாகவும் கதையை முழுவதுமாக கேட்ட பிறகு தான் முடிவு செய்வேன் என்று சொல்லியதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.