சினிமா செய்திகள்
’பிசாசு 2’ படத்தின் மாஸ் அறிவிப்பை வெளியிட்ட மிஸ்கின்!
பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கிய பிசாசு திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு ரிலீசாகி நல்ல வெற்றி பெற்ற நிலையில் எட்டு ஆண்டுகள் கழித்து அவரை இயக்கிய பிசாசு 2 திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகளையும் படக்குழுவினர் தொடங்கிவிட்டன .
முதல்கட்டமாக இந்த படத்தின் டீசர் வரும் 29 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என நான்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தின் நான்கு மொழி டீசர் ஒரே நாளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் பூர்ணா, சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பதும், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கவுரவ வேடத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது.
கார்த்திக் ராஜா இசையில், சிவா சாந்தகுமார் ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் இந்த படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் என்பது குறிப்பிடத்தக்கது.
#Pisasu2 | #Pisachi2 | #Pishaachi2 | #Pishaachi2@Rockfortent @andrea_jeremiah @shamna_kkasim @Actorsanthosh @Lv_Sri @kbsriram16 @APVMaran @saregamasouth @teamaimpr @UrsVamsiShekar @PRO_Priya pic.twitter.com/iKZ4iDhUDr
— Mysskin (@DirectorMysskin) April 25, 2022