சினிமா செய்திகள்
ஒரு படம் ஓடிருச்சுன்னா யாஷ் பெரிய ஆளா? திரையுலகினர் ஆவேசம்!
சமீபத்தில் வெளியான ’கேஜிஎப் 2’ படம் வெற்றி பெற்றதாகவும் உலகம் முழுவதும் ரூ.500 கோடி வசூல் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
அதுமட்டுமன்றி ரஜினி, விஜய், அஜித் போன்ற தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்களின் வசூலை கேஜிஎப் 2 படத்தின் வசூல் முந்திவிட்டதாக செய்திகளை ஊடகங்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.
கேஜிஎப் நடிகர் யாஷ் திரையுலக வாழ்க்கையில் வெற்றி பெற்ற படங்கள் இரண்டே இரண்டுதான். அதில் ஒன்று கேஜிஎப், இன்னொன்று கேஜிஎப் 2. இந்த இரண்டு படங்களை தவிர அவரது முந்தைய படங்களின் மொத்த வசூலே 30 முதல் 40 கோடி வரை தான் இருந்துள்ளது.
இரண்டு படங்கள் வெற்றி விட்டால் அவர் என்ன பெரிய ஆளா? அஜித் விஜய் ரஜினிகாந்த் ஆகியோர் கடந்த பல ஆண்டுகளாக இத்தனை சில்வர் ஜூப்ளி தந்து கொண்டிருக்கின்றனர். எத்தனை தயாரிப்பாளர்கள் இவர்களால் கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளனர் என்பதை மறந்துவிட்டு ஊடகங்கள் இரண்டு படங்கள் வெற்றி பெற்ற யாஷை தூக்கி வைத்துக் கொண்டாடுவது சரியா? என திரையுலகினர் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளனர்.