சினிமா செய்திகள்
‘ஆர்.ஆர்.ஆர்’ வசூலை மிஞ்சியது ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’: ஆச்சரிய தகவல்
பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவான ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் உலகம் முழுவதும் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்து உள்ள நிலையில் இந்த வசூல் சாதனையை சமீபத்தில் வெளியான தி காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற திரைப்படம் முறியடித்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியான தி காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற திரைப்படம் காஷ்மீரில் பண்டிட்கள் எந்த அளவுக்கு கொடுமைப்படுத்தப்பட்டார்கள் என்றும் உள்நாட்டிலேயே அகதிகளாக விரட்டப்பட்ட சம்பவத்தை தத்ரூபமாக எடுக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டது .
பிரதமர் மோடி உள்பட பாஜகவினர் இந்த படத்தை கொண்டாடியதை அடுத்து இந்த படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது என்பதும் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் வசூலை வாரி குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் பாலிவுட்டில் மட்டும் 200 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள நிலையில் அதையும் தாண்டி தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் 250 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. பாலிவுட்டில் மட்டும் ஆர்.ஆர்.ஆர். படத்தை விட தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் ரூபாய் 50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.