சினிமா செய்திகள்
ரூ.200 கோடி, ரூ.300 கோடியெல்லாம் கப்சா: ‘வலிமை’ படத்தின் உண்மையான வசூல் இதுதான்!
அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படத்தின் வசூல் 200 கோடியை தாண்டி விட்டது என்றும் 300 கோடி ரூபாயை நெருங்கி வருகிறது என்றும் சமூக வலைதளங்களில் ஒரு சிலர் கூறிவந்தனர்
‘வலிமை’ படத்தின் தயாரிப்பாளர் போனிகபூரும் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த படம் 200 கோடி வசூலை தாண்டிவிட்டது என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த படம் தற்போது கிட்டத்தட்ட அனைத்து திரையரங்குகளிலும் தூக்கப்பட்ட நிலையில் முழுமையான வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது
இந்த படத்தின் தமிழக, இந்திய மற்றும் உலக வசூல் குறித்த நிலவரத்தை தற்போது பார்ப்போம்:
வலிமை படத்தின் தமிழக வசூல் ரூ.99 கோடி
வலிமை படத்தின் தெலுங்கு மாநிலங்கள் வசூல் ரூ.6.30 கோடி
வலிமை படத்தின் கர்நாடகா வசூல் ரூ.6.40 கோடி
வலிமை படத்தின் கேரளா வசூல் ரூ 2.95 கோடி
வலிமை படத்தின் வட இந்திய வசூல் ரூ 4.30 கோடி
ஆகமொத்தம் இந்தியாவில் மொத்தம் வசூல் ரூ.118.95 கோடி
வெளிநாடுகளில் வலிமை வசூல் ரூ.36.50
ஆகமொத்தம் உலக அளவில் மொத்தம் வசூல் ரூ.155.45 கோடி