உலகம்
9 மனைவிகளில் ஒருவர் விவாகரத்து செய்ததால் மாடல் இளைஞர் எடுத்த அதிரடி முடிவு!
![9 wives - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/04/9-wives.webp)
பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் இளைஞர் ஒருவரின் 9 மனைவிகளில் ஒருவர் திடீரென விவாகரத்து பெற்றதை அடுத்து அவர் எடுத்த அதிரடி முடிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரேசில் நாட்டின் மாடல் இளைஞர் ஆர்த்துர் உர்சோ என்பவருக்கும் 9 மனைவிகள் உள்ளனர். இவர் தனது ஒன்பது மனைவிகளுடனும் சந்தோசமாக குடும்பம் நடத்திக் கொண்டிருந்தபோது திடீரென ஒரு மனைவி விவாகரத்து பெற இருப்பதாக அறிவித்தார்.
தான் மற்ற மனைவிகளுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்றும் தனது கணவர் என்னிடம் மட்டும் வாழ வேண்டும் என விரும்புவதாகவும் அவர் விவாகரத்துக்கு காரணம் தெரிவித்தார்.
இந்த நிலையில் தனது 9 மனைவிகளின் ஒருவர் விவாகரத்து செய்தது குறித்து கருத்து தெரிவித்த ஆர்ட்த்ஹுர், ‘இது கொஞ்சமும் நியாயம் இல்லை என்றும் அவரது முடிவு எனக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது என்றும் கூறினார். மேலும் விவாகரத்து செய்த மனைவிக்கு பதிலாக வேறு ஒருவரை திருமணம் செய்யப்போவதில்லை என்று அவர் கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இருப்பினும் இன்னொரு போட்டியில் அவர் தனக்கு எப்போதும் 10 மனைவிகள் இருக்க வேண்டும் என்பது தனது கனவு என்றும் அதனால் விரைவில் மீண்டும் திருமணம் செய்வேன் என்றும் அவர் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.