சினிமா செய்திகள்
தியேட்டரில் வெளியான 20 நாட்களில் ஓடிடி ரிலீஸ்: அதிரடி அறிவிப்பு!
திரையரங்குகளில் வெளியான இருபதே நாட்களில் மாஸ் நடிகரின் படம் ஓடிடியில் ரிலீஸ் என்ற அறிவிப்பு திரையரங்கு உரிமையாளர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவான திரைப்படம் ராதேஷ்யாம். இந்த படம் ரூபாய் 400 கோடி பட்ஜெட்டில் உருவான நிலையில் இந்த படம் 300 கோடிக்கும் குறைவாகவே வசூல் ஆனதாகவும் இந்த படத்தால் தயாரிப்பாளருக்கு கிட்டத்தட்ட நூறு கோடி ரூபாய் நஷ்டம் என்றும் கூறப்பட்டது .
மேலும் இந்த படத்திற்கு வாங்கிய சம்பளம் முழுவதையும் பிரபாஸ் திருப்பிக் கொடுத்து விட்டதாகவும் ஒரு வதந்தி பரவி வருகிறது. இந்த நிலையில் ராதே ஷ்யாம் திரைப்படம் திரையரங்குகளில் மார்ச் 11ஆம் தேதி வெளியான நிலையில் ஏப்ரல் 1ஆம் தேதி இந்தப் படம் அமேசான் ஓடிடியில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது என்பதை அடுத்து திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திரையரங்குகளில் வெளியான இருபதே நாட்களில் இந்த படம் ஓடிடியில் ரிலீசாக இருக்கிறது.
Hop on this magical journey of love with #RadheShyamOnPrime, April 1
#Prabhas @hegdepooja @director_radhaa @UVKrishnamRaju #Vamshi #Pramod @PraseedhaU @UV_Creations @GopiKrishnaMvs @TSeries pic.twitter.com/D7ZcDFfS7y
— prime video IN (@PrimeVideoIN) March 28, 2022