சினிமா செய்திகள்
இது தேர்தல் அல்ல, சினிமா: விஜய் ரசிகர்களை மொத்தமாக கவர்ந்த யாஷ்!
இது தேர்தல் அல்ல சினிமா என உருக்கமாக பேசி ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களை கே.ஜி.எப் 2 நடிகர் யாஷ் கவர்ந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் நடித்த பீஸ்ட் மற்றும் யாஷ் நடித்த கே.ஜி.எப் 2 ஆகிய இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்த நாட்களில் வெளியாக உள்ளது. இந்த இரண்டு திரைப்படங்களும் ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக இருப்பதால் இரு படங்களுக்கும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மோதிக் கொண்டனர் .
இந்த நிலையில் நேற்று கே.ஜி.எப் 2 ட்ரெய்லரை வெளியிட்டு பேசிய நடிகர் யாஷ் இது தேர்தல் அல்ல, சினிமா என்றும், தேர்தலில் ஒருவருடைய வாக்கை பெற வேண்டும் என்பதற்காக இரு தரப்பினரும் முயற்சி செய்வார்கள் என்றும் அதில் ஒருவர் தோல்வியடைவார் ஒருவர் வெற்றி அடைவார் என்றும் ஆனால் சினிமாவில் இருவருமே ஜெயிப்பார்கள் என்றும் கூறியுள்ளார் .
கே.ஜி.எப் 2 திரைப்படம் பீஸ்ட் படத்திற்கு போட்டியானது அல்ல என்றும் இரண்டு திரைப்படங்களும் ஒரே நேரத்தில் வெளிவரும் வெற்றி படம் என்றும் அவர் கூறினார். மேலும் நான் விஜய்யின் பீஸ்ட் படத்தை பார்ப்பேன் என்றும் என்னுடைய படத்தை விஜய் ரசிகர்கள் பார்ப்பார்கள் என்று நான் நம்புகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார் .
யாஷின் இந்த பாசிட்டிவ் பேச்சு ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களையும் கவர்ந்து விட்டதால் தமிழகத்தில் கே.ஜி.எப் 2 விஜய் ரசிகர்களால் பெற்று பெறுவது உறுதி என்று கூறப்படுகிறது.