இந்தியா
சசிகலாவுக்கு தூது அனுப்பிய சோனியாகாந்தி!
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி நடிகையும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகருமான விஜயசாந்தி மூலம் தகவல் ஒன்றை சொல்லி அனுப்பியதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
சமீபத்தில் நடிகை விஜயசாந்தி சசிகலாவை பெங்களூரு சிறையில் சந்தித்தார். தெலுங்கானா காங்கிரஸ் முக்கிய தலைவரான விஜயசாந்தி சோனியா, ராகுலுடன் நல்ல உறவு வைத்துள்ளார். அதே போல ஜெயலலிதா மற்றும் சசிகலாவிடமும் நல்ல உறவு வைத்திருந்தார். இந்நிலையில் இவர்கள் சந்திப்பில் சோனியா சசிகலாவுக்கு ஒரு தகவல் சொல்லி அனுப்பியதாக மன்னார்குடி வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டு சசிகலா அணியை அதிமுகவுடன் இணைக்க முயற்சி செய்கிறது. பாஜகவின் இந்த திட்டம் நடக்க கூடாது. சசிகலா அணி வரும் பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும். அடுத்து அமையும் ஆட்சி சசி குடும்பத்திற்கு எதிராக பாஜக எடுக்கும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தும் என சோனியா சொல்லி அனுப்பியுள்ளா.
மேலும் நீங்கள் பாஜகவின் சூழ்ச்சிக்கு பலியாகிவிடாதீர்கள். பாஜகவை எதிர்ப்பதில் உறுதியாக நில்லுங்கள் என சோனியா சொன்னதாக தகவல் பரவுகிறது. இதையேதான் டிடிவி தினகரனுடன் நெருக்கமாக உள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தினகரனிடம் கூறியதாகவும் கூறப்படுகிறது.