விமர்சனம்
விஸ்வாசம் படம் படுதோல்வியா? முதல் விமர்சனம் இதோ!
![Viswasam - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/01/Viswasam.jpeg)
விஸ்வாசம் மற்றும் பேட்ட படம் நாளை வெளியாகிறது. இந்நிலையில், ஐக்கிய அரபு நாட்டின் சென்சார் போர்ட் குழுவின் உறுப்பினரான உமர் சந்த், தனது முதல் விமர்சனத்தை இணையத்தில் இன்றே வெளியிட்டுள்ளார்.
விஸ்வாசம் படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாகவும், மாஸ் மசாலா கடந்த ஆக்ஷன் படமாகவும் செல்வதாகவும், இரண்டாம் பாதியில், தேவையில்லாத பிளாஷ்பேக் காட்சிகள் குறுக்கிட்டு, படத்தின் ஓட்டத்தை குறைப்பதாகவும், உண்மையை சொல்லப்போனால் படு மொக்கையாகவும் உள்ளதாக ஓபன் ஸ்டேட்மென்ட் கொடுத்துள்ளார்.
வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து நான்காவது முறையும் சிவாவை நம்பி அஜித் பண்ணியுள்ள படத்தின் ரிசல்ட் இப்படி மாறிவிட்டதே என ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தாலும், படத்தை எப்படியாவது ஓட வைப்போம் என்ற வெறியிலும் உள்ளனர். மறு பக்கம் இவர் ஒரு போலி. டீசரே வெளியாக படத்தின் டீசரை பார்த்ததாக பொய் கூறியவர் என்றும் விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
ரஜினியின் பேட்ட படத்தின் ரிப்போர்ட் இதுவரை வெளியாகவில்லை. பார்க்கலாம் நாளை இந்த ரேஸில் ஜெயிக்கப்போவது தலையா தலைவரான்னு.