Connect with us

தமிழ்நாடு

தமிழக சட்டமன்றத்தில் வேளாண் பட்ஜெட் தாக்கல்: முக்கிய அம்சங்கள்!

Published

on

தமிழக சட்டமன்றத்தில் நேற்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று வேளாண் பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். இந்த பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

* பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு மொத்தமாக ரூ.33,007 கோடி ஒதுக்கீடு

* கடந்தாண்டு வேளாண்துறைக்கு ரூ.32,775.78 கோடி ஒதுக்கப்பட்டது

*அரசு மாணவியர் விடுதிகளில் காய்கறி, பழங்கள், மூலிகை தோட்டம்

* 200 விடுதிகளில் ₨20 லட்சம் மதிப்பீட்டில் திட்டம் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

* பயிர் காப்பீடு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த ரூ.2,546 கோடி ஒதுக்கீடு

* உழவர் சந்தைகளில் மாலை நேரத்திலும் சிறுதானியம், பயிறு வகைகள் விற்பனை செய்ய நடவடிக்கை

* விவசாய பணிகளில் ட்ரோன்களின் பயன்பாட்டுக்கு ரூ.10 கோடியில் திட்டம்

* பருவம் இல்லாத தக்காளி சாகுபடியை ஊக்குவிக்க ரூ.4 கோடி ஒதுக்கீடு

* ரூ.175 கோடியில் புதிய நீர்வழிப்பாதை மேம்பாடு 2.0 திட்டம்

* தேனீ வளர்ப்பு திட்டத்துக்கு ரூ.10.25 கோடி ஒதுக்கீடு

* தென்னை, மா, கொய்யா, வாழை தோட்டங்களில் ஊடுபயிர்களை ஊக்குவிக்க ₨27.51 கோடி ஒதுக்கீடு

* 38 கிராமங்களில் மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் மையங்கள் அமைக்க ₨95 கோடி ஒதுக்கீடு

* வேளாண் சந்தை மற்றும் ஆராய்ச்சி மையங்கள் அமைக்க ₨16 கோடி நிதி ஒதுக்கீடு

* டெல்டா பகுதியில் பாசன கால்வாய்களை தூர்வார ₨5 கோடி ஒதுக்கீடு

* வேளாண் பண்ணை குட்டைகள் அமைக்க ₨3 கோடி ஒதுக்கீடு

* செல்போன் மூலம் இயங்கும் தானியங்கி பம்பு செட்டுகள் அமைக்க ₨1.50 கோடி ஒதுக்கீடு

* ரூ. 65 கோடியில் 3 ஆயிரம் விவசாயிகளுக்கு சோலார் பம்புசெட்கள் வழங்கப்படும்

* சிறு தானிய, எண்ணெய் வித்து மதிப்பு கூட்டு இயந்திரங்கள் மானியத்தில் வழங்க ₨5 கோடி நிதி ஒதுக்கீடு

* சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மானியத்தில் வழங்க ₨10 கோடி ஒதுக்கீடு

* புதிய மின் மோட்டார் பம்பு செட்டுகள் மானியத்தில் வழங்க ₨5 கோடி நிதி ஒதுக்கீடு

* பயிர்களில் பூச்சிகள் தாக்குதலை கட்டுப்படுத்த ₨5 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு

* இயற்கை வேளாண்மை, விளைபொருள் ஏற்றுமதி ஆகியவற்றில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்படும்

* ஆதித்திராவிடர் மற்றும் பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீத மானியம்

* வேளாண் துறையிலும், மின்னணு வேளாண் திட்டம் ஏற்படுத்தப்படும்

* விதை முதல் விளைச்சல் வரை மின்னணு முறையில் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படும்

* 19 லட்சம் ஹெக்டேரில், ரூ. 32.48 கோடி மதிப்பீட்டில் சீர்மிகு நெல் சாகுபடி திட்டம்

* ரூ. 27 கோடியில் ஊடுபயிர் சாகுபடியை ஊக்கப்படுத்த தொகுப்பு வழங்கும் திட்டம்

* ₨28.50 கோடியில் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி அதிகரிக்கப்படும்

* கரும்பு டன் ஒன்றுக்கு 195 ரூபாய் ஊக்கத்தொகை

* சர்க்கரை ஆலைகளை நவீனப்படுத்த ₨3 கோடி ஒதுக்கீடு

* விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க டான்ஜெட்கோவுக்கு ₨5,157 கோடி நிதி ஒதுக்கீடு

* மதிப்பு கூட்டல் மற்றும் உணவு பதப்படுத்த 3 மிகப்பெரிய உணவு பூங்கா அமைக்க ₨381 கோடி ஒதுக்கீடு

* ₨12 கோடி மதிப்பீட்டில் விவசாயிகளுக்கு உயர் ரக மரங்கள் வழங்கி மரம் வளர்ப்பு திட்டம் ஊக்குவிக்கப்படும்

* எண்ணெய் வித்து சாகுபடியை அதிகப்படுத்த 28 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட வேளாண் சார்ந்த தொழில்களை ஊக்கப்படுத்த 65 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* பயிறு வகை விதைகளை மானியத்தில் வழங்க 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* வேளாண் சார்ந்த தொழில்களை தொடங்க பட்டதாரி இளைஞர்களுக்கு ₨1 லட்சம் நிதியுதவி

* நெல் அறுவடைக்குப்பின் பயிர் சாகுபடியை ஊக்கப்படுத்த ₨500 கோடி நிதி ஒதுக்கீடு

* விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் கருவிகள் வழங்க ₨15 கோடி ஒதுக்கீடு

* நெல்லுக்கு பதிலாக சிறுதானியம் உள்ளிட்ட மாற்று பயிர்களை சாகுபடி செய்ய ₨10 கோடி ஒதுக்கீடு

* மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு ₨71 கோடி நிதி ஒதுக்கீடு

* இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ₨400 கோடி நிதி ஒதுக்கீடு

* 60,000 தமிழக விவசாயிகளுக்கு தார்பாய் வழங்க 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

* அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு ₨300 கோடி நிதி ஒதுக்கீடு

* விவசாயிகளுக்கு இடுபொருள் மானியமாக ₨154 கோடி வழங்கப்பட்டுள்ளது

* விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காண சிறப்பு குழு அமைப்பு

 

author avatar
seithichurul
சினிமா4 மணி நேரங்கள் ago

கோல்ட் கேஸ்: ஓடிடி திரையை உலுக்கிய மர்ம திரில்லர்!

ஜோதிடம்4 மணி நேரங்கள் ago

6 நாளில் சுக்கிரன் பெயர்ச்சி: பணம், புகழ், அதிர்ஷ்டம்!

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
மாத பலன்4 மணி நேரங்கள் ago

ஆவணி மாத ராசி பலன் 2024!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்17 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்1 நாள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்1 நாள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு1 நாள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா1 நாள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்1 நாள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

வணிகம்6 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

சினிமா3 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்4 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!