சினிமா செய்திகள்
’அஜித் 61’, அஜித் 62ஐ அடுத்து ‘அஜித் 63’ அப்டேட்: அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்
அஜித் நடிக்கவிருக்கும் 61 வது படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த படப்பிடிப்பிற்காக அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு இருக்கிறது என்பதும் மணிஹெய்ஸ்ட் போன்று இதுவும் ஒரு வங்கிக் கொள்ளை கதையம்சம் கொண்டது என்றும் கூறப்படுகிறது .
இந்த நிலையில் அஜீத் 61 படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்காத நிலையில் அஜித் 62 படத்தின் தகவல் கசிந்தது என்பதும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜீத் நயன்தாரா நடிக்கும் இந்த படம் முழுக்க முழுக்க நகைச்சுவை மற்றும் ரொமான்ஸ் கதையம்சம் கொண்டது என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் அஜித் 61 மற்றும் அஜித் 62 ஆகிய படங்களை அடுத்து தற்போது அஜித் 63 படம் குறித்த தகவல் கசிந்துள்ளது ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது. அஜித்தின் 63வது திரைப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தை சிவா இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது .
ஏற்கனவே வீரம், வேதாளம், விவேகம், விசுவாசம் படங்களில் சிவாவின் இயக்கத்தில் நடித்த அஜித் மீண்டும் அவருடன் இணைய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் வைகைபுயல் வடிவேலு நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.