சினிமா செய்திகள்
ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் அடுத்த படத்தில் சிம்பு இல்லை, இந்த பிரபல நடிகர்தான்: தனுஷை பழிவாங்குகிறாரா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் ஒரு மியூசிக் ஆல்பத்தை இயக்கினார் என்பதும் அந்த மியூசிக் ஆல்பம் விரைவில் ரிலீஸாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் அந்த திரைப்படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாகவும் தங்களைத் தாங்களே பத்திரிகையாளர்கள் என்று கூறிக்கொள்ளும் ஒரு சிலர் வதந்திகளைப் பரப்பினர்.
ஆனால் ஐஸ்வர்யாவின் அடுத்த படத்தில் சிம்பு கண்டிப்பாக இல்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது. அதற்கு பதிலாக சிவகார்த்திகேயன் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது
மேலும் இந்த படத்தில் ராகவா லாரன்ஸின் ஒரு முக்கிய கேரக்டரில் நடிப்பார் என்றும் இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளிவரும் என்றும் கூறப்படுகிறது
சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் இடையே கடந்த சில ஆண்டுகளாக கருத்து மோதல் இருந்து வரும் நிலையில் சிவகார்த்திகேயன் அடுத்த படத்தை ஐஸ்வர்யா இயக்க இருப்பதாக வெளிவந்த தகவல் தனுஷ் தரப்பிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது