சினிமா செய்திகள்
விமல் நடித்த ‘குலசாமி’: அட்டகாசமான மோஷன் போஸ்டர் ரிலீஸ்!
விமல் , தான்யா ஹோப் நடிக்கும் ‘குலசாமி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை சற்றுமுன் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வெளியிட்டார் .
MIK Productions Private Limited தயாரிப்பில்,விமல் , தான்யா ஹோப் நடிப்பில், நாயகன் மற்றும் பில்லா பாண்டி படங்களை இயக்கிய குட்டிப்புலி சரவண சக்தி இயக்கத்தில் , மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வசனம் எழுதும் படம் ‘குலசாமி’.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, விரைவில் திரையில் வெளிவரவிருக்கும் நிலையில் ‘குலசாமி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டார்.
வைட் ஆங்கில் ரவிசங்கரன் ஒளிப்பதிவில், தனி ஒருவன் எடிட்டர் கோபி கிருஷ்ணா படத்தொகுப்பில் பின்னணி பாடகர் மஹாலிங்கம் இசையமைப்பில் உருவாகிய இந்த படத்திற்கு கனல் கண்ணன் சண்டை பயிற்சி அமைத்துள்ளார். ஆக்ஷ்ன் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்தின் டீஸர் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.