இந்தியா
ஒரு திரைப்படத்தை பார்க்க அரசே அளித்த விடுமுறை: எந்த படம் தெரியுமா?
ஒரு திரைப்படத்தை பார்ப்பதற்காக அரசே விடுமுறை அளித்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
90களில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காஷ்மீர் பண்டிட்டுகள் தீவிரவாதிகளால் அடித்து விரட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை உருவாக்கிய நிலையில் இதை திரைப்படமாக பிரபல இயக்குனர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி என்பவர் இயக்கியுள்ளார். தி காஷ்மீர் பைல்ஸ் என்ற டைட்டில் கொண்ட இந்த திரைப்படத்தை பார்த்த பிரதமர் நரேந்திர மோடி படக்குழுவினர்களை அழைத்து வாழ்த்து தெரிவித்தார் என்பதும் ஒரு சில மாநிலங்கள் இந்த படத்திற்கு வரிவிலக்கு அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தி காஷ்மீர் பைல்ஸ் படத்தை பார்க்க போலீசாருக்கு விடுமுறை வழங்கப்படும் என மத்திய பிரதேச மாநிலம் அறிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பிரதேசம் உள்துறை அமைச்சர் மத்தியபிரதேச காவல்துறையில் பணியாற்றும் அனைவரும் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்பதற்காக போலீசாருக்கு அரசு விடுமுறை வழங்குகிறது’ என்று கூறியுள்ளார்.
மத்திய பிரதேஷ் தலைநகர் போபாலை சேர்ந்த ஒரு நடிகர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு திரைப்படத்திற்காக போலீசாருக்கு விடுமுறை அளிப்பது நாட்டிலேயே இதுதான் முதல் முறை என்று கூறப்படுகிறது.