சினிமா செய்திகள்
தனுஷ் படத்தை இயக்க வெற்றி மாறன் மறுப்பு? பின்னணியில் ரஜினியா?
தனுஷின் கால்ஷீட்டுக்காக பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் வரிசையில் இருக்கும் நிலையில் தானே முன்வந்து நாம் இருவரும் சேர்ந்து ஒரு படம் பண்ணலாமா என வெற்றிமாறனிடம் தனுஷ் கேட்டதாகவும் அதற்கு வெற்றிமாறன் இப்போதைக்கு முடியாது என மறுத்து விட்டதாகவும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என வரிசையாக சூப்பர் ஹிட் வெற்றி படங்களை கொடுத்து கொண்டிருந்த கூட்டணிதான் தனுஷ் மற்றும் வெற்றிமாறன். தனுஷ் தற்போது தொடர் வீழ்ச்சியில் இருப்பதை அடுத்து மீண்டும் வெற்றிமாறனுடன் ஒரு திரைப்படத்தில் நடித்து தனது மார்க்கெட்டை நிலை நிறுத்த வேண்டும் என்று முடிவு செய்தாராம் .
ஆனால் அவர் வெற்றிமாறனுடன் இது குறித்து பேசிய போது விடுதலை, வாடிவாசல் , விஜய் படம் என அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகியுள்ளதால் இன்னும் ஒரு சில ஆண்டுகளுக்கு இணைந்து படம் பண்ண முடியாது என வெற்றி மாறன் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
ரஜினிக்கு மிகவும் நெருக்கமான தயாரிப்பாளர் ஒருவர் கொடுத்த அழுத்தம் காரணமாக தனுஷ் படத்தை வெற்றிமாறன் இயக்க முடியாது என கூறியதாக வதந்தி ஒன்று கோலிவுட்டில் மிக வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.