சினிமா செய்திகள்
’தளபதி 67’ படத்திலும் பிரபல ஹீரோ தான் வில்லன்: ஆச்சரியத்தில் கோலிவுட்!
ஒரு திரைப்படத்தில் வில்லன் கேரக்டர் வலுவாக இருந்தால் மட்டுமே மாஸ் ஹீரோவின் கேரக்டரும் அதைவிட வலுவாக்கும் என்பதை சரியாக புரிந்து வைத்தவர் நடிகர் விஜய் என்பது அனைவரும் அறிந்ததே.
அதனால்தான் மாஸ்டர் படத்தில் தனக்கு இணையாக விஜய்சேதுபதிக்கு வில்லன் கேரக்டர் கொடுத்தார் என்பதும் அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ‘பீஸ்ட்’ படத்தில் செல்வராகவன் வில்லனாக நடித்துள்ள நிலையில், விஜய் அடுத்ததாக நடிக்கவிருக்கும் தளபதி 66 படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தளபதி 67 திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்தப் படத்தில் ஒரு பிரபல ஹீரோ தான் வில்லனாக நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அவர்தான் பிரபல ஹீரோ பஹத் பாசில் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே புஷ்பா, விக்ரம் உள்பட ஒருசில திரைப்படங்களில் தனது மாஸ் நடிப்பை வெளிப்படுத்திய பகத் பாஸில் தளபதியுடன் இணைந்தால் அவரது நடிப்பு தூள் கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.