Connect with us

கிரிக்கெட்

திண்டுக்கல் அணியை வீழ்த்தி ‘சாம்பியன்’ ஆனது மதுரை பாந்தர்ஸ்

Published

on

சங்கர் சிமெண்ட் தமிழ்நாடு பிரீமியர் லீக் 2018 இறுதிப் போட்டியில் சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணி திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதன் முறையாக கோப்பையை கைப்பற்றியது.

சங்கர் சிமெண்ட் தமிழ்நாடு பிரீமியர் லீக் 2018 தொடரின் இறுதிப்போட்டி ஆகஸ்ட் 12ஆம் தேதி [12-08-18] ஞாயிற்றுக்கிழமை அன்று, சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சீசெம் மதுரை பாந்தர்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய, திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில், தொடக்க ஆட்டக்காரர் ஹரி நிஷாந்த், அபிஷேக் தன்வார் வீசிய முதல் ஓவரிலேயே போல்டாகி ஒரு ரன்னில் வெளியேறினார். அடுத்து, தான் சந்தித்த முதல் பந்திலேயே பவுண்டரி விளாசிய அனிருத் சீதா ராம், லோகேஷ் ராஜ் வீசிய ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் 4 ரன்களில் வெளியேறினார்.

அதேபோல் மூன்றாவது ஓவரில் என்.எஸ்.சதுர்வேத் 9 ரன்களில் அபிஷேக் தன்வார் பந்துவீச்சில் வெளியேறினார். நான்காவது ஓவரில் 6 பந்துகளை சந்தித்த வருண் தோத்தாத்ரி ரன் ஏதும் லோகேஷ் ராஜ் பந்தில் வெளியேறினார். அபிஷேக் தன்வார் வீசிய ஐந்தாவது ஓவரில் மோகன் அபினவ் ஒரு ரன்னில் வெளியேறினார்.

ஒரு ஓவருக்கு ஒரு விக்கெட்டுகளை பறிகொடுத்ததால், திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, 5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 28 ரன்கள் எடுத்து மோசமான நிலைக்கு ஆளானது.

ஆறாவது ஓவரில் விவேக் ராஜ் கொடுத்த அடுத்தடுத்து இரண்டு கேட்ச் வாய்ப்புகளை மதுரை அணியினர் வீணடித்தனர். ஆனால், இந்த சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொள்ள தவறிய விவேக் ராஜ், லோகேஷ்வர் பந்தில் கார்த்திகேயனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் 10 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 10 ஓவர்கள் முடிவில் 60 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது. அதன் கேப்டனும், தொடக்க ஆட்டக்காரருமான என்.ஜெகதீசன் மற்றும் ஆர்.ரோஹித் இணை மேற்கொண்டு விக்கெட் விழாமல் பொறுமையாக ஆடியது.

பின்னர், அணியின் எண்ணிக்கை 85ஆக இருந்தபோது ஆர்.ரோஹித் தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார். இக்கட்டான சூழ்நிலையில், இந்த ஜோடி 6ஆவது விக்கெட்டுக்கு 43 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் சிறப்பாக ஆடிய கேப்டன் என்.ஜெகதீசன் 42 பந்துகளில் அரைச்சதம் கடந்தார். ஆனால், நீண்ட நேரம் நிலைக்காமல் அடுத்தடுத்த பந்திலேயே அவுட்டானர். அவர், 44 பந்துகளில் [5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்] 51 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து எம்.சிலம்பரசன் 2 ரன்களில் வெளியேறினார்.

19.5 ஓவர்களில் முடிவில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்கள் எடுத்தது. மதுரை அணி தரப்ப்பில் அதிகப்பட்சமாக அபிஷேக் தன்வார் 4 விக்கெட்டுகளையும், லோகேஷ் ராஜ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அதன் பின்னர் 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மதுரை அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஆட்டத்தின் இரண்டாவது பந்திலேயே தலைவன் சற்குணம் ரன் ஏதும் எடுக்காமல் எல்.பி.டபள்யூ. முறையில் வெளியேறினார். நான்காவது பந்தில் துஷார் ரஹேஜா 0, ஐந்தாவது பந்தில் கேப்டன் ரோஹித் 0 என அடுத்தடுத்து வெளியேற ஒரு ஓவர் முடிவில் 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.

அதன் பின்னர் தொடக்க ஆட்டக்காரர் அருண் கார்த்திக் மற்றும் ஷிஜித் சந்திரன் இருவரும் இணைந்து அருமையாக ஆடினர். இதனால், பவர்பிளே முடிவில் 34 ரன்கள் எடுத்திருந்தனர். இதனையடுத்து, அட்டகாசமாக ஆடிய அருண் கார்த்திக் 41 பந்துகளில் அரைச்சதம் கடந்தார். இதனால் சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணி 15 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்தது.

இருவரும் இணைந்து அருமையான பாட்னர்ஷிப் அமைத்ததால் அணி வெற்றியை நோக்கி சென்றது. இதனால், 17.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதன் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. அருண் கார்த்திக் 50 பந்துகளில் [4 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்] 75 ரன்களுடனும், ஷிஜித் சந்திரன் 49 பந்துகளில் [3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்] 38 ரன்களுடனும் கடைசி வரை களத்தில் இருந்தனர்.

ஜோதிடம்4 நிமிடங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்14 நிமிடங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்26 நிமிடங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்38 நிமிடங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்50 நிமிடங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்59 நிமிடங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

ஜோதிடம்1 மணி நேரம் ago

செம்பருத்தி பூ: செல்வம், செழிப்புக்கு அதிர்ஷ்ட பூ! பரிகார டிப்ஸ்

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

72 ஆண்டுகளுக்குப் பிறகு சனியின் கோபத்தில் சிக்கும் 5 ராசிகள்!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

ஏலக்காய்: சுவையும், மருந்தும் கொண்ட ஒரு அற்புதமான மசாலா!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி சிறப்பு கூழ்: புத்துணர்ச்சி தரும் ஊட்டச்சத்து நிறைந்த செய்முறை

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!