சினிமா செய்திகள்
திகட்ட திகட்ட வெளியான ‘பொன்னியின் செல்வன்’ ஸ்டில்ஸ்: லைகா கொடுத்த இன்ப அதிர்ச்சி!
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்டமான திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி சற்றுமுன் அறிவிக்கப் பட்டது என்பதும் செப்டம்பர் 30ஆம் தேதி இந்தப் படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்று அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்தது .
இன்று லைக்கா நிறுவனத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் பிறந்தநாள் என்பதால் லைக்கா நிறுவனம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் அடுத்தடுத்த ஸ்டில்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது.
முதலாவதாக திரிஷாவின் குந்தவை கேரக்டர், ஐஸ்வர்யா ராயின் நந்தினி கேரக்டர், கார்த்தியின் பொன்னியின் செல்வன் கேரக்டர், ஜெயம் ரவியின் ராஜராஜசோழன் கேரக்டர், விக்ரமின் கரிகாலன் டைரக்டர் என அடுத்தடுத்து அசத்தலான ஸ்டில்களை வெளியிட்டுள்ளது .
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் அதிகாரபூர்வ ஸ்டில்கள் வெளியானதை அடுத்து இந்த ஸ்டில்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமடைந்து இந்த படத்தில் விரைவில் பார்த்தே தீர வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.