உலகம்
ரஷ்ய பீரங்கி ஏறியதால் அப்பளம் போல் ஆன உக்ரைன் முதியவரின் கார்: வைரல் வீடியோ
உக்ரைன் நாட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய ராணுவ பீரங்கி வண்டி ஒன்று உக்ரைன் முதியவரின் கார் மீது ஏறிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
உக்ரைன் நாட்டில் ராணுவ தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யா நான்காவது நாளாக தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்து வந்தாலும் உக்ரைன் நாட்டிற்கு மிகப்பெரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் இதுவரை 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் உக்ரைன் நாட்டை நோக்கி வந்த ரஷ்ய ராணுவ பீரங்கி ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்த உக்ரைன் முதியவர் ஒருவரின் கார் ஒன்றின் மீது ஏறியது.
இதனால் அந்த கார் அப்பளம் போல் சுக்குநூறாக நொறுங்கியது. இருப்பினும் அந்த காரை ஓட்டி வந்த முதியவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். காரின் உள்ளே சிக்கிக் கொண்ட அந்த நபரை அருகிலிருந்தவர்கள் கதவை உடைத்து காப்பாற்றினார். இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
NSFW: WHY THE FUCK DID THEY DO THAT pic.twitter.com/b9tlpGLoNM
— Green Ranger Energy (@DetectiveDrip_) February 25, 2022