சினிமா செய்திகள்
தளபதி 66 படத்தில் இணையும் எஸ்.எஸ்.ராஜமெளலி நாயகன்!
தளபதி விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான ’தளபதி 66’ திரைப்படத்தில் பிரபல தெலுங்கு ஹீரோ இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ’தளபதி 66’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் நட்சத்திரங்கள் குறித்த தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
ஏற்கனவே இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது இந்த திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நானி நடிக்க இருப்பதாக தெரிகிறது. இவர் ஏற்கனவே எஸ்எஸ் ராஜமவுலி இயக்கிய ‘நான் ஈ’ என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
தமன் இசையமைக்கும் இந்த படத்தை வம்சி இயக்க இருப்பதாகவும் தில் ராஜூ தயாரிக்க இருப்பதாகவும் வெளிவந்த தகவல் ஏற்கனவே அறிந்ததே. தளபதி விஜயின் அடுத்த திரைப்படத்தில் பிரபல தெலுங்கு ஹீரோ நானி வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது