சினிமா செய்திகள்
நெகட்டிவ் விமர்சனங்கள் எதிரொலி: ’வலிமை’ படக்குழு எடுத்த அதிரடி முடிவு!
அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படம் ஆக்ஷன் பிரியர்களுக்கும் அஜித் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்தது. ஆனால் நடுநிலை ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்கவில்லை என்று விமர்சனங்களில் இருந்து தெரியவருகிறது .
குறிப்பாக அனைத்து ஊடகங்களிலும் இந்த படத்தில் தேவையில்லாமல் சென்டிமென்ட் காட்சிகள் புகுத்தப்பட்டுள்ளதாகவும் அதுமட்டுமின்றி படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாகவும் கூறப்பட்டது.
இதனை அடுத்து நெகட்டிவ் விமர்சனங்களால் ’வலிமை’ படக்குழு அதிரடி முடிவை எடுத்துள்ளது. அதாவது நாளை முதல் படத்தின் 18 நிமிட காட்சிகள் ட்ரிம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிந்தியில் 16 நிமிடங்கள் ட்ரிம் செய்யப்பட உள்ளன.
குறிப்பாக சென்டிமெண்ட் காட்சிகள் நீக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. முதல் பாதியில் இரண்டு நிமிடம் இரண்டாம் பாதியில் 12 நிமிடம் ட்ரிம் செய்யப்பட உள்ளதாகவும் இதனை அடுத்து இந்த படம் விறுவிறுப்பாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.