சினிமா செய்திகள்
அடுத்த மாதம் இரண்டு.. இந்த மாதமும் ஒன்று – அசத்தும் ஜி.வி. பிரகாஷ்!
![aingaran (1) - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/01/aingaran-1.jpg)
ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் அடுத்த மாதம் பிப்ரவரி 1ம் தேதி சர்வம் தாளமயம் மற்றும் பிப்ரவரி 14ம் தேதி 100% காதல் என இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகப் போவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில், இந்த மாதமே ஈட்டி இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஐங்கரன் திரைப்படம் வெளியாகும் என இயக்குநர் அதிரடியாக அறிவித்துள்ளார்.
இதனால், 30 நாட்களுக்குள் 3 படங்களை ரசிகர்களுக்கு தரப்போகிறார் ஜி.வி. பிரகாஷ்.
மேலும், அடங்காதே, ஜெயில் போன்ற படங்களும் ரிலீசுக்கு ரெடியாகி வருகின்றன.