Connect with us

தமிழ்நாடு

நீட் தேர்வு மாணவர்களை கொல்லும் பலிபீடம்: முதல்வர் ஸ்டாலின் ஆவேச பேச்சு!

Published

on

நீட் விலக்கு மசோதாவை தமிழக சட்டமன்றத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் சற்று முன் தாக்கல் செய்தார் என்பதும் இதனை அடுத்து அனைத்து கட்சிகளும் இந்த மசோதா குறித்து விவாதம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இறுதியில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தனது கருத்தை தெரிவித்தார். 2016 ஆம் ஆண்டு அவசர சட்டம் மூலமாக நீட் தேர்வை கொண்டு வந்தது பாஜக அரசு தான் என்றும், மாணவர்களின் மருத்துவ கனவில் தடுப்புச்சுவரை நீட் எழுப்புகிறது என்றும் தெரிவித்தார்.

மேலும் நீட் நுழைவு தேர்வு முறைகேடுகள் எப்படி எல்லாம் நடந்ததா என்பதை பட்டியலிட்ட முதலமைச்சர் மு க ஸ்டாலின், நீட் தேர்வு மாணவர்களை கொள்ளும் பலி பீடம் என்றும் நீட் விலக்கு மசோதா சட்டசபையின் இறையாண்மையை வெளிப்படுத்துகிறது என்றும் தெரிவித்தார்.

142 நாட்களுக்கு பின்னர் ஆளுனர் மசோதாவை திருப்பி அனுப்பியிருக்கிறார் என்றும் ஏகே ராஜன் குழுவின் அறிக்கை யூகங்களின் அடிப்படையில் என ஆளுநர் கூறியிருப்பது சரியல்ல என்றும் ஏகே ராஜன் குழு அமைக்கப்பட்டது குறித்தும், ஏகே ராஜன் குழுவின் பணிகள் குறித்தும் விரிவான விளக்கத்தை முதல்வர் அளித்தார்.

நீட் என்பது கல்வி முறையல்ல என்றும் பயிற்சி முறை என்றும் தகுதி என்ற பெயரிலான அறிவு தீண்டாமையை ஒழிக்கவே நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதாவை தாக்கல் செய்வதாகவும் அவர் தெரிவித்தார். சில மாணவர்களை சிறைக்கும் பல மாணவர்களை கல்லறைக்கும் அனுப்பிய நீட்தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லை என்றும் கூறிய முதல்வர் முக ஸ்டாலின் அரசியல் சாசனப்படி மாநில அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.

ஆளுநர் பதவியே தேவையில்லை என்ற சூழலை ஆளுநர் உருவாக்க மாட்டார் என நம்புகிறேன் என்றும் சட்டசபையின் சட்டமியற்றும் அதிகாரத்தை கேள்வி கேட்கிறார் ஆளுநர் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். இறுதியில் ’தமிழ்நாடு வாழ்க தமிழ்நாடு வாழ்க தமிழ்நாடு வாழ்க’ என மூன்று முறை முழக்கமிட்டு முதல்வர் ஸ்டாலின் தனது உரையை முடித்துக் கொண்டார்.

 

author avatar
seithichurul
ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

செவ்வாய் ராசி பயணம்: மிதுன ராசியில் செவ்வாய் நுழைவால் உண்டாகும் நன்மைகள் – புகழேற்ற ராசிகள்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சூரியன் – கேது இணைவு: கன்னி ராசியில் செப்டம்பர் மாதம் பணப்பெட்டியை தூக்கும் முக்கியமான நிகழ்வு!

ஜோதிடம்2 மணி நேரங்கள் ago

விருச்சிகம் ராசி: நலமுறு வருமானம், பணியில் சிக்கல்கள் மற்றும் புதிய வாய்ப்புகள்!

ஜோதிடம்2 மணி நேரங்கள் ago

மேஷம் ராசி: நிதி விஷயங்களில் கவனமாக இருங்கள் – செப்டம்பர் மாதப் பலன்கள்!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

குரு: அதிர்ஷ்ட கதவு திறந்தது.. 3 ராசிகளின் வாழ்க்கை மாறும்!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

விநாயகர் சதுர்த்தி 2024: தேதி, நேரம் மற்றும் பூஜை விதிகள்!

ஜோதிடம்3 மணி நேரங்கள் ago

சூரியன் மற்றும் சுக்கிரன் சேர்க்கை: பண வளர்ச்சியுடன் முன்னேற்றம் அடையக் கூடிய ராசிகள்!

ஜோதிடம்3 மணி நேரங்கள் ago

கன்னி ராசிக்கு செப்டம்பர் மாதப் பலன்கள்: வளர்ச்சி மற்றும் சீரான முன்னேற்றங்களை எதிர்கொள்ளுங்கள்!

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

மீன் சாப்பிட்ட பிறகு கையில் மீன் வாசனையை போக்க எளிய டிப்ஸ்!

ஜோதிடம்3 மணி நேரங்கள் ago

சிம்ம ராசிக்கான செப்டம்பர் மாத பலன்கள்: நிதி, காதல், ஆரோக்கியத்தில் அதிர்ஷ்டம் வருமா?

வணிகம்5 நாட்கள் ago

YouTube Premium கட்டணம் உயர்வு: வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தமிழ்நாட்டில் தங்கம் விலையில் மாற்றமில்லை!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(28-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (29/08/2024)!

சினிமா செய்திகள்5 நாட்கள் ago

பிரபல நகைச்சுவை நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்!

இந்தியா5 நாட்கள் ago

ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்க அறிய வாய்ப்பு!

சினிமா5 நாட்கள் ago

லால் சலாம் ஓடிடிக்கு வருது!

வணிகம்2 நாட்கள் ago

ஸ்டாலின் அமெரிக்க பயணம்: தமிழகத்திற்கு இதுவரை கிடைத்துள்ள முதலீடுகளும் வேலைவாய்ப்புகளும்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

உண்மையான முட்டை vs. போலியான முட்டை: கண்டுபிடிப்பது எப்படி?

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ. 42,820 ஊதியத்தில் UCIL புதிய வேலைவாய்ப்பு!