தமிழ்நாடு
டி.என்.பி.எஸ்.சி குரூப்2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பு!
![tnpsc - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/04/tnpsc.jpg)
டிஎன்பிஎஸ்சி தேர்வு குறித்த முக்கிய தகவல்களை டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு இம்மாதம் வெளியாகும் என்றும் அடுத்த 75 நாட்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் இந்த ஆண்டு டிசம்பர் வரை 32 வகையான டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறிய பாலசந்திரன் குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு மார்ச் மாதம் அறிவிக்கப்படும் என்றும் இனி வரும் காலங்களில் தேர்வு நடத்தும் நேரம் மாற்றப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
மேலும் இந்த ஆண்டில் ஜனவரி முதல் டிசம்பர் வரை 32 வகையான டிஎன்பிஎஸ்சி தேர்தல் நடத்தப்படும் என்றும் அந்தத் தேர்வுகளில் அரசின் உத்தரவுப்படி அனைத்து தேர்வுகளிலும் தமிழ் மொழி கட்டாயம் மொழி தேர்வாக நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.