Connect with us

சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ திரைப்படம்: ரிலீஸ் தேதி இதுதான்!

Published

on

சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ திரைப்படம் கடந்த டிசம்பர் மாதமே ரிலீசுக்கு தயாரான நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டிருந்தது. இந்த நிலையில் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என ஒரு சில செய்திகள் வெளியான நிலையில் தற்போது இந்த படம் மார்ச் 25-ஆம் தேதி திரையரங்குகளில் உலகம் முழுவதும் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் மிக வேகமாக தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் ’டாக்டர்’ திரைப்படம் போலவே இந்த படமும் 100 கோடி ரூபாய் வசூல் ஆகும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘டான்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதை அடுத்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள ’அயலான்’ திரைப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் அதே போல் அவர் தமிழ் தெலுங்குத் திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார் என்பதும் இந்த இரண்டு படங்களும் இந்த ஆண்டுக்குள் ரிலீஸாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா நடித்துள்ள இந்த படத்தில் , ஷிவாங்கி, சமுத்திரக்கனி, எஸ்ஜே சூர்யா, பாலசரவணன், சூரி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படத்தை லைகா மற்றும் சிவகார்த்திகேயன் புரோடக்சன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளன என்பதும், இந்த படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

author avatar
seithichurul
வணிகம்19 மணி நேரங்கள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்20 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்1 நாள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்1 நாள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்1 நாள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்1 நாள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்1 நாள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்2 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ்: இவருக்கு பொன்னான மனசுப்பா! ராகு கருணை மழையாய் கொட்டுகிறார்.. அனுபவிக்கும் அதிர்ஷ்ட ராசிகள்!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வணிகம்3 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்2 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

சினிமா2 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!