தமிழ்நாடு
வெங்கையா நாயுடுவை துணைபிரதமராக்கிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்!
அதிமுக கூட்டத்தில் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடுவை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் துணைபிரதமர் என குறிப்பிட்டது சலசலப்பை ஏற்படுத்தியது.
நேற்று முன்தினம் அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் ஆண்டிப்பட்டி சட்டப்பேரவை தொகுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணைமுதல்வா் ஓ.பன்னீா்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சா் விஜயபாஸ்கா், வனத்துறை அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இந்த கூட்டத்தில் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், குடியரசு துணைத்தலைவா் வெங்கையா நாயுடு என்று கூறுவதற்கு பதிலாக துணைபிரதமா் வெங்கையா நாயுடு என்று குறிப்பிட்டாா். இதனால் கூட்டத்தில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. மேலும் மேடையில் இருந்த துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் இதனால் சிரமத்துக்கு உள்ளாகினர்.