இந்தியா
மேகதாது அணை.. கர்நாடக எம்.பிக்கள் முடிவு.. நிர்மலா சீதாராமனும் பங்கேற்கிறார்
டெல்லி: மேகதாது அணை கட்டுவது தொடர்பாக டெல்லியில் கர்நாடக எம்.பிக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளனர். இந்த போராட்டத்தில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் கர்நாடகாவிற்கு ஆதரவாக கலந்து கொண்டு போராட உள்ளார்.
மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக தமிழக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் போராடி வருகிறார்கள். தமிழகத்தை சேர்ந்த அனைத்து எம்.பிக்களும் தினமும் நாடாளுமன்றத்தில் போராடி வருகிறார்கள்.
இதனால் நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடரே முடங்கி உள்ளது. இந்த நிலையில் இந்த போராட்டத்திற்கு எதிராக கர்நாடக எம்.பிக்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்த பிரச்சனை குறித்து விவாதம் செய்வதற்காக டெல்லியில் கர்நாடக எம்.பிக்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் சதானந்த கவுடா, நிர்மலா சீதாராமன், ஆனந்தகுமார் ஹெக்டே, முன்னாள் பிரதமர் தேவ கவுடா, கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் டி.கே சிவக்குமார் கலந்து கொண்டனர்.