சினிமா
காத்து வாக்குல ரெண்டு காதல் வியாபாரம் !- எத்தனை கோடி தெரியுமா?….
![kaathu vaakula - Bhoomitoday kaathu vaakula](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/11/vijay-sethupatih.jpg)
நானும் ரவுடிதான்படத்திற்கு பின் மீண்டும் விஜய் சேதுபதி – நயன்தாரா நடிக்க விக்னேஷ் சிவன் இயக்கி வரும் திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இப்படத்தில் சமந்தாவும் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் கிறிஸ்துமஸ் விருந்தாக இம்மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிப்ரவரி மாதம் காதலர் தினத்தன்று வெளியாகும் என சமீபத்தில் செய்திகள் வெளியானது.
தற்போது இப்படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. நயன்தாரா டப்பிங் செய்யும் புகைப்படங்களை சமீபத்தில் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், இப்படத்தி டிஜிட்டல் (ஓடிடி) மற்றும் தொலைக்காட்சி உரிமை ஆகியவற்றை ஹாட் ஸ்டார் நிறுவனம் ரூ.21 கோடி விலை கொடுத்து வாங்கியுள்ளது. எனவே, படம் தியேட்டரில் வெளியாகை 75 நாட்களுக்கு பின் இப்படம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.