Connect with us

தமிழ்நாடு

உச்ச நீதிமன்றத்தை மோடி கட்டுப்பாட்டில் வைத்துள்ளாரா?: ஸ்டாலின் பேச்சின் அர்த்தம் என்ன?

Published

on

ஜனநாயகத்தின் முக்கியமான தூணாகவும், மக்களின் கடைசி நம்பிக்கையாகவும் இருப்பது நீதித்துறை ஆகும். நாட்டில் பல்வேறு தீர்ப்புகள் நீதித்துறையின் மீது மக்களுக்கு அதீத நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நீதித்துறை ஒரு சுதந்திரமான அமைப்பு. முதல்வரோ, பிரதமரோ, மன்னரோ, சாமானியனோ எல்லாரும் நீதித்துறையின் முன் சமம். ஒரே தராசில் தான் நிற்கவைக்கப்படுகிறார்கள்.

இந்த நீதித்துறையை ஒருவர் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் அது மக்களாட்சியின் தத்துவத்தையும், ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் கேலிக்கூத்தாக்கிவிடும். மக்களை முட்டாளாக்கும் செயலாகும். இத்தகைய நீதித்துறையின் உச்சபட்ச தலைமை நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் ஆகும். நாட்டின் மிக முக்கியமான பிரச்சனைகளை தீர்த்து வைப்பது உச்ச நீதிமன்றமாகும்.

இந்த உச்ச நீதிமன்றத்தை பிரதமர் மோடி தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போல பொருள்படும்படி பேசியுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் சிலை திறப்புவிழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டார்கள்.

அதில் பேசிய திமுக தலைவர். மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி தன்னை பிரதமர் என்று நினைக்காமல் ஏதோ பரம்பரை மன்னர் ஆட்சி நடத்துவதாக மமதை கொண்ட பிரதமராக மோடி இருக்கிறார். தன்னை பிரதமராக மட்டுமல்ல ஜனாதிபதியாக, தன்னை உச்ச நீதிமன்றமாக, தன்னையே ரிசர்வ் வங்கியாக, தன்னையே சிபிஐயாக, தன்னையே வருமானத்துறையாக நினைத்துக்கொண்டிருக்கிறார் என குறிப்பிட்டார்.

மு.க.ஸ்டாலினின் இந்த பேச்சு சர்ச்சையையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி தன்னையே உச்ச நீதிமன்றமாக நினைத்துகொண்டிருக்கிறார் என்ற மு.க.ஸ்டாலினின் பேச்சின் அர்த்தம் என்ன? பிரதமர் மோடி உச்ச நீதிமன்றத்தை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் என ஸ்டாலின் கூறுகிறாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

author avatar
seithichurul
வணிகம்4 மணி நேரங்கள் ago

ஜியோவின் புதிய OTT திட்டங்கள்: அதிரடி சலுகைகள்!

தமிழ்நாடு4 மணி நேரங்கள் ago

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் போக்குவரத்து மாற்றம்!

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

அரசு வேலைக்கு தட்டச்சு பயிற்சி அவசியம்: தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சனி பகவானின் ஆசிர்வாதம்: கிச்சடி உணவின் ஆன்மீக முக்கியத்துவம்!

இந்தியா6 மணி நேரங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்6 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா6 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்5 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா