சினிமா செய்திகள்
ரஜினி உள்பட 4 நடிகர்களை வம்புக்கிழுத்த இயக்குனர்: வறுத்தெடுத்த ரசிகர்கள்!
![rajinikanth - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/02/rajinikanth.jpg)
ரஜினி உள்பட நான்கு பெரிய நடிகர்களை வம்புக்கு இழுக்கும் வகையில் டுவிட் ஒன்றை பதிவு செய்த இயக்குனர் ஒருவரை ரசிகர்கள் வறுத்து எடுத்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பல வெற்றி படங்களை இயக்கியவரும் சர்ச்சைக்குரிய இயக்குனர் என்று பெயர் பெற்றவருமான ராம் கோபால் வர்மா சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா’ படத்தின் டிரைலரை பாராட்டி பதிவு செய்துள்ளார்.
அந்த பதிவில் இதுபோன்ற தைரியமான கேரக்டரில் நடிக்க அல்லு அர்ஜுன் என்ற ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் நடிகரால் மட்டுமே முடியும் என்றும், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, மகேஷ் பாபு, பவன் கல்யாண் போன்றவர்களால் இதுபோன்றோ அல்லது இதைவிட சிறப்பாகவோ நடித்து விட முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
அல்லு அர்ஜுனை ராம்கோபால் பாராட்டுவதில் எந்த தவறும் இல்லை என்றும் ஆனால் ரஜினிகாந்த் உள்பட பல சாதனைகள் செய்த பெரிய நடிகர்களை வம்புக்கு இழுப்பது தேவையில்லாத வேலை என்றும் ரசிகர்கள் ராம்கோபால் வர்மாவின் வறுத்தெடுத்து வருகின்றனர். இதனால் டுவிட்டரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால் சம்பந்தப்பட்ட நான்கு நடிகர்களும் இது குறித்து எந்தவித பதிவையும் பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
. @alluarjun is the only SUPER STAR who is unafraid of just playing a REALISTIC character and I dare @PawanKalyan @urstrulyMahesh @KChiruTweets @rajinikanth and all other extras to do it ..PUSHPA is not FLOWER ..it’s FIRE https://t.co/bLIdlsG89Y
— Ram Gopal Varma (@RGVzoomin) December 6, 2021