சினிமா
சோனாக்ஷி சின்ஹாவையே ஏமாற்றிய அமேசான்!
பாலிவுட்டின் முன்னணி நடிகையான சோனாக்ஷி சின்ஹா, அமேசானில் போஸ் ஹெட்செட் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். ஆனால், அவருக்கு அமேசான் தரப்பில் இருந்து வந்த பார்சலிலோ, வெறும் இரும்பு துண்டு மட்டுமே வந்துள்ளது.
இதனால், கடுப்பான சோனாக்ஷி சின்ஹா, அமேசானில் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவத்தை, புகைப்படத்துடன் ட்விட்டரில் பதிவிட்டு, அமேசானிடம் நேரடியாக டேக் செய்து கேள்வி எழுப்பினார்.
இதனை கண்ட அமேசான் ஹெல்ப், தவறுக்கு மன்னிக்கவும், உடனடியாக உங்கள் பிரச்சனை சரிசெய்யப்படும் என பதில் ட்வீட் போட்டது. அந்த ட்வீட்டுக்கு கமெண்ட் செய்த சில நெட்டிசன்கள், சோனாக்ஷி பெரிய நடிகை என்பதால் தான் அமேசான் பதில் கூறுகிறது. சாமனியர்களுக்கு இதுபோல் நடந்தால் கஸ்டமர் கேர் போனைக் கூட எடுப்பதில்லை என குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அவரைப் போலவே பலரும் குரல் கொடுத்தும் அவற்றுக்கு அமேசான் ஹெல்ப் எந்தவித பதிலும் கூறவில்லை.