சினிமா
சர்ஜுன் மீது கோபத்தில் நயன்தாரா!
ஐரா பட இயக்குநர் மீது நயன்தாரா செம்ம கடுப்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஸ்வாசம், தளபதி 63, சைரா நரசிம்ம ரெட்டி என பெரிய படங்களில் நாயகியாக நடித்து வரும் நயன்தாரா, அறம், கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகளை தொடர்ந்து, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களான ஐரா, கொலையுதிர்காலம் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.
இதில், கொலையுதிர்காலம் படத்தை ஜனவரி மாதம் ரீலிஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.
ஆனால், லட்சுமி, மா போன்ற குறும்படங்களை இயக்கியவர் மற்றும் எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் படத்தின் இயக்குனருமான சர்ஜூன் இயக்கத்தில் நயந்தாரா நடித்து வரும் ஐரா படத்தில் தான் பிரச்சனை உருவாகியுள்ளது.
இந்த படத்தின் ஷூட்டிங் முழுமை அடையும் நிலையில் இந்த படத்தின் கிளைமேக்ஸ் இன்னும் எடுக்கவில்லையாம், மேலும் இந்த படத்தை பிப்ரவரி மாதம் வெளியிடலாம் என படக்குழு நினைத்திருந்த நிலையில் சர்ஜூன் இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளை எடுக்க தாமதிப்பதாக கூறப்படுகிறது.
இதனால் நயன்தாரா, இயக்குனர் சர்ஜூன் மீது செம கடுப்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.