சினிமா செய்திகள்
பிக்பாஸ் நிகழ்ச்சி: கமல்ஹாசனுக்கு பதில் சூர்யாவா?
![surya 1200 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/08/surya-1200.jpg)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களைத் தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல்ஹாசனுக்கு திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது கமல்ஹாசன் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும், அவரது உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவமனை நிர்வாகத்தின் அறிக்கை வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் கமல்ஹாசன் 15 முதல் ஒரு மாதம் வரை ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வாரம் சனி, ஞாயிறு முதல் ஒரு சில வாரங்களுக்கு கமல்ஹாசனுக்கு பதில் வேறு ஒருவர் இந்த நிகழ்ச்சியை நடத்துவார் என்று கூறப்பட்டது.
முதலில் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என செய்திகள் வெளியான நிலையில் தற்போது அவர் தொகுத்து வழங்க வில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் விஜய் டிவி நிர்வாகம் மற்றும் பிக்பாஸ் குழுவினர் சூர்யா மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகிய இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இவர்கள் இருவரில் ஒருவர் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வரும் வெள்ளி அல்லது சனிக்கிழமை விஜய் டிவி வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.