Connect with us

சினிமா செய்திகள்

நடிகர் சூர்யாவாக இருந்திருந்தால் ஆதரவு அளித்திருக்க மாட்டோம்: ஆர்கே செல்வமணி அறிக்கை

Published

on

ஜெய்பீம் திரைப்படம் விவகாரத்தில் நடிகர் சூர்யாவாக இருந்திருந்தால் அவருக்கு ஆதரவு அளித்து இருக்க மாட்டோம் என்றும் நடிகர் சூர்யா ஒரு சமூக அக்கறை உள்ளவர் என்றும் ஏழைகளின் கல்விக்கு உதவி செய்பவர் என்பதால் தான் அவருக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்றோம் என்றும் இயக்குனர் சங்கத்தின் சார்பில் ஆர்கே செல்வமணி அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

மதிப்பிற்குரிய திரு. அன்புமணி ராமதாஸ்‌ அவர்களுக்கு வணக்கம்‌!

உங்களின்‌ சமூக பங்களிப்பு நாடறிந்ததே! திரைப்படங்களில்‌ புகைபிடிக்கும்‌ காட்சிகள்‌ இன்று குறைந்திருப்பது உங்கள்‌ சமூக அக்கறையால்தான்‌. அதற்கு எங்களின்‌ நன்றி!

தாங்களும்‌, தங்களின்‌ தந்தையாரும்‌ தாங்கள்‌ சார்ந்த சமூகத்திற்கு மட்டுமல்லாமல்‌ பிற்படுத்தப்பட்ட, மிகவும்‌ பிற்படுத்தப்பட்ட பல சமூகத்தின்‌ முன்னேற்றத்திற்கு முன்னின்று குரல்‌ கொடுத்தவர்கள்‌. எல்லாவற்றுக்கும்‌ மேலாக ஜாதிகளுக்கு அப்பாற்பட்டு அனைத்து சமூகங்களையும்‌ ஒருங்கிணைந்து தமிழனாக நீங்கள்‌ பார்த்த பார்வையில்‌ தமிழ்ப்பற்றையும்‌, உணர்வையும்‌ அறிந்தவர்கள்‌ நாங்கள்‌. அடித்தள
மக்களுக்கு நீங்கள்‌ கொடுத்த குரலைத்தான்‌ இன்று ’ஜெய்பீம்’ திரைப்படமும்‌ கொடுத்திருக்கிறது. சமூக அக்கறையோடும்‌, சமூக அவலங்களின்‌ பிரதிபலிப்பாகவும், பெரும்பாலும்‌ நம்‌ திரைப்படங்கள்‌ இருந்து வருகிறது. அப்படிப்பட்ட படம்தான்‌ இந்த ’ஜெய்பீம்’

உண்மைச்‌சம்பவங்களின்‌ அடிப்படையில்‌ சமூகநீதி காக்க உருவான படம்தான்‌ இது. பட்டுவேட்டியில்‌ ஒரு கறையோல்‌ ஏதேச்சையாக அல்லது தவறுதலாக உங்கள்‌ சமூக குறியீடு ஒரு காட்சியில்‌ வந்துவிட்டது. அது மிகவும்‌ வருந்ததக்கது. அதை நீங்கள்‌ சுட்டிக்காட்டியதும்‌, உங்கள்‌ உணர்வுக்கு மதிப்பளித்து உடனே அந்தக்‌ குறியீடு நீக்கப்பட்டது. பிறகு திரு.சூர்யா அவர்களிடம்‌ நீங்கள்‌ நாகரிகமாக கேட்ட கேள்விகளுக்கு,
சூர்யா அவர்களும்‌ நாகரிமாக பதில்‌ அளித்துள்ளார்‌. ஏழை மாணவர்களின்‌ கல்விக்காக திரு. சூர்யா அவர்கள்‌ செய்யும்‌ சேவையை உங்களைப்போல்‌ நாடும்‌ நன்கறியும்‌. உங்களின்‌ நோக்கமும்‌, சூர்யா அவர்களின்‌ நோக்கமும்‌ ஏறக்குறைய ஒன்றுதான்‌. விபத்தாக ஒரு நிகழ்வு நடந்துவிட்டது. ஒடுக்கப்பட்ட ஜாதிக்கு குரல் கொடுக்கும்‌ அவருக்கு ஒருபோதும்‌ குறிப்பிட்ட ஒரு ஜாதியை அவமதிக்கும்‌ நோக்கம்‌ இருக்க
வாய்ப்பே இல்லை! இதை நாங்கள்‌ நன்கறிவோம்‌.

சூர்யா வெறும்‌ ஒரு நடிகர்‌ என்றிருந்தால்‌ எங்கள்‌ ஆதரவு குரல் ஒலித்திருக்காது. ஆனால்‌ அவர்‌ சமூக அக்கறையுள்ளவர்‌, ஏழைகளின்‌ கல்விக்‌ கண்ணுக்கு கருணைப்‌ பார்வையாய்‌ ஒளிர்கின்றவர்‌. அதனால்தான்‌. அவர்மீது எந்த தவறும்‌ இருக்காது என்ற நம்பிக்கையில்‌ அவருக்கு ஆதரவாக குரல்‌ கொடுக்கிறோம்‌. நீங்கள்‌ உணர்வுமிக்க தமிழன்‌, திரு. சூர்யா அவர்களை தமிழுனாக பாருங்கள்‌ உங்கள்‌ சகோதரனாக பாருங்கள்‌. அப்பொழுது உங்கள்‌ கோபம்‌ பாசமாக மாறிவிடும்‌ என்ற நம்பிக்கை தமிழர்களாகிய எங்களுக்கு உண்டு. திரையில்‌ படைப்பு சுதந்திரம்‌, அரசியல்‌ சுதந்திரம்‌, இரண்டும்‌ முக்கியத்துவம்‌ வாய்ந்ததே. அதில்‌ தெரியாமல்‌ ஒரு தவறு நடந்தால்‌ நட்புரீதியாக அதைத்‌ தீர்த்துக்காள்வதே ஆரோக்கியமாக இருக்கும்‌. எங்கள்‌ நேசக்கரம்‌ நீட்டுகிறோம்‌, உங்கள்‌ பாசக்கரத்தால்‌ கை குலுக்குங்கள்‌.

இவ்வாறு இயக்குனர் சங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

இந்தியா53 நிமிடங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்1 மணி நேரம் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா2 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்2 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்3 மணி நேரங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்3 மணி நேரங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!