தமிழ்நாடு
தமிழகத்தில் குறைந்தாலும் சென்னையில் அதிகரிக்கும் கொரோனா!
![today corona tn - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/08/today-corona-tn.jpg)
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்று மேலும் குறைந்தாலும் சென்னையில் 120 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் கடந்த சில நாட்களாக 100, 105 என்ற அளவில் இருந்த சென்னை பாதிப்பு, இன்று 120 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பில் முழு விவரங்களை தற்போது பார்ப்போம்
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 809
தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 27,14,025
சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 120
கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 134
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 14
தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 36,273
தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 934
தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 26,68,001
தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,01,034
தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 5,25,42,503