தமிழ்நாடு
யார் சொன்னாலும் நாங்கள் தீபாவளி வாழ்த்து சொல்ல மாட்டோம்: திமுக எம்பி டுவிட்
![dmk mp senthilkumar - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/11/dmk-mp-senthilkumar.jpg)
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட பலரும் தீபாவளி வாழ்த்து சொன்னாலும் திமுகவில் உள்ள முதலமைச்சர்கள் தீபாவளி வாழ்த்து சொல்ல மாட்டார்கள் என திமுக எம்பி செந்தில்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று இந்தியா முழுவதும் தீபாவளி கொண்டாடப் பட்ட நிலையில் இந்திய தலைவர்கள் மட்டுமின்றி உலகத் தலைவர்களும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக அமெரிக்க அதிபர் துணை அதிபர் உட்பட பல பிரமுகர்கள் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக ஸ்டாலின் அவர்கள் தீபாவளி வாழ்த்து தெரிவிக்கவில்லை என குற்றம்சாட்டப்பட்டது
இதற்கு திமுக எம்பி செந்தில்குமார் அவர்கள் பதில் அளித்துள்ளார். அதில் ’பைடன் சொல்லிட்டாரு, போரிஸ் ஜான்சன் சொல்லிட்டாரு, இம்ரான்கான் சொல்லிட்டாரு என்பதால் நாங்கள் சொல்லப் போவதில்லை
ஏனெனில் பேரறிஞர் அண்ணா சொல்லவில்லை, கலைஞர் கருணாநிதி சொல்லவில்லை, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சொல்ல மாட்டார். திமுக முதல்வர்கள் என்றும் சொல்ல மாட்டார்கள். ஏனென்றால் நாங்கள் பகுத்தறிவாதிகள். இதனால் உங்களுக்கு என்ன பிரச்சனை? என்று கேள்வி எழுப்பியுள்ளார். டாக்டர் செந்தில்குமார் எம்பியின் இந்த பதிவு இந்துக்களை பெரும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
Biden சொல்லிட்டாரு
Boris Johnson சொல்லிட்டாரு
Imran khan சொல்லிட்டாரு
So What
CM பேரறிஞர் அண்ணா சொல்லவில்லை
CM கலைஞர் கருணாநிதி சொல்லவில்லை
CM முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சொல்ல மாட்டார்
திமுகCM என்றும் சொல்ல மாட்டார்கள
We are what we are Rationalists
What's Ur problem https://t.co/udZxl1cM1d
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) November 4, 2021