கேலரி
அம்மா நடிகை ஆன பின்பும் அடங்கலயே!… டூ மச்சாக போஸ் கொடுத்த பிரகதி….
திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை பிரகதி. இவர் பாக்யராஜின் ’வீட்ல விசேஷங்க’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி ஒரு சில தமிழ் படங்களிலும் ஏராளமான தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி பெண், வம்சம், அரண்மனை கிளி போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜயகாந்துக்கு ஜோடியாக பெரிய மருது படத்திலும் நடித்தார். கதாநாயகி வாய்ப்பு குறையவே புத்திசாலித்தனமாக அம்மா நடிகையாக மாறினார். தெலுங்கில் பல படங்களில் ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்துள்ளார். தமிழில் கூட சந்தானம் நடித்த ‘இனிமே இப்படித்தான்’, ஜிவி பிரகாஷ் நடித்த வணக்கம்டா மாப்ள ஆகிய படங்களில் அம்மாவாக நடித்துள்ளார்.
ஆந்திர அரசின் நந்தி விருதையும் பெற்ற இவர் உடற்பயிற்சி செய்வதில் விருப்பம் உள்ளவர். எனவே, உடற்பயிற்சி குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் அவருடைய இன்ஸ்டாகிராமில் லைக்ஸ்களை குவித்து வருகிறார்.
இந்நிலையில், கவர்ச்சி நடிகை போல் உடை அணிந்து அவர் கொடுத்துள்ள போஸ் லைக்ஸ்களை குவித்து வருகிறது. இந்த புகைப்படங்களை இதுவரை 30 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர்.