சினிமா செய்திகள்
எனக்கு விருப்பம் இல்லை, நான் வெளியே போகவும் தயார்: அக்சரா அறிவிப்பால் பரபரப்பு
பிக்பாஸ் வீட்டில் இருந்து கூட வெளியே செல்ல தயார் என்றும் என்ன தண்டனை வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்ள தயார் என்றும் அக்ஷரா பிக்பாஸ் இடம் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் நடைபெறும் நிலையில் இன்றைய முதல் புரமோவில் நாமினேஷன் குறித்த காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென நெருப்பு என்ற காயின் நிரூப் வைத்து உள்ளதை அடுத்து அவருக்கு சிறப்பு சலுகை அளிக்கப்படும் என்றும், இதனை அடுத்து வீட்டில் உள்ள பெண்களில் யாராவது ஒருவரை உதவியாளராக அவர் சேர்ந்து செய்துவிடலாம் என்றும் பிக்பாஸ் அறிவிக்கின்றார்.
பிக் பாஸின் இந்த அறிவிப்பை எதிர்பார்த்து போலவே அக்ஷராவை தனது உதவியாளராக நிரூப் நியமனம் செய்கிறார். ஏற்கனவே அக்ஷராவுக்கும் நிரூபுக்கும் இடையே கமல்ஹாசன் முன்னிலையிலேயே பிரச்சனை வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நிரூப் முடிவை அக்ஷரா ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். நிரூப் உதவியாளராக செல்ல முடியாது என்றும் அதற்காக என்ன தண்டனை வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்ள தயார் என்றும் வீட்டை விட்டு வெளியே போக வேண்டும் என்றும் ஆனால் அதற்கும் தயார் என்றும் அக்சரா பிக்பாஸ் இடம் தெரிவிக்கின்றர்.
ஆரம்பத்திலிருந்து அக்ஷராவை வெளியேற்றுங்கள் என்று நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன், நீங்கள் தான் கேட்க மாட்டீர்கள் என்று பிக்பாஸிடம் நிரூப் சொல்லும் காட்சிகளும் இன்றைய முதல் புரோமோ வீடியோவில் உள்ளன. இன்றைய முதல் புரோமோ விடியோவில் இருந்து இன்றைய நிகழ்ச்சி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#Day29 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/qwGybeVzuL
— Vijay Television (@vijaytelevision) November 1, 2021