சினிமா செய்திகள்
உலகம் சுற்றும் அஜித்தின் லேட்டஸ்ட் அட்டகாசமான புகைப்படம்!
தல அஜித் கடந்த சில நாட்களாக பைக்கில் உலகத்தை சுற்றி வருகிறார் என்பதும் அவரது பயணத்தின் இடையே ஆங்காங்கே ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இந்தியா – பாகிஸ்தான் வாகா எல்லையில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் சமூக தளங்களில் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாலைவனத்தில் அவர் பைக்கின் நிழலில் உட்கார்ந்து கொண்டு தண்ணீர் குடிக்கும் புகைப்படமும் வைரல் ஆனது என்பது அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில் தற்போது மலை உச்சியில் தல அஜித் இருக்கும் ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படம் எந்த இடத்தில் எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை என்றாலும் அஜித் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அட்டகாசமாக இருக்கும் இந்த புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அஜீத் நடித்து முடித்துள்ள ’வலிமை’ திரைப்படம் வரும் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது. இதனை அடுத்து மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜீத் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.