சினிமா செய்திகள்
சரவெடி சத்தம் அகில உலகமெங்கும் ஒலிக்க: ‘அண்ணாத்த’ டிரைலர் ரிலீஸ் தகவல்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில், டி இமான் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அண்ணாத்த’. இந்த படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் வரும் தீபாவளியன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக இந்த திரைப்படம் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளை ‘அண்ணாத்த’ திரைப்படம் ஆக்கிரமித்துக்கொண்டதை அடுத்து விஷாலின் ‘எனிமி’ திரைப்படத்திற்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ‘அண்ணாத்த’ படத்தின் புரமோஷன் பணிகளை கடந்த சில வாரங்களாக மிகப்பெரிய அளவில் செய்து வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தற்போது டிரைலர் ரிலீஸ் குறித்த செய்தியை அறிவித்து உள்ளது. இந்த படத்தின் டிரைலர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளதை அடுத்து ரஜினி ரசிகர்கள் குஷியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ட்ரெய்லரில் ரஜினிகாந்த் மட்டுமின்றி இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ்ராஜ், சூரி ஆகியோர்களின் காட்சிகள் இடம்பெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராப், ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், வேல ராமமூர்த்தி, சூரி, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி. இமான் இசையமத்துள்ளார். வெற்றி ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
Saravedi saththam agila ulagam engum olikka ????#AnnaattheTrailer is releasing Tomorrow @ 6 PM!@rajinikanth @directorsiva #Nayanthara @KeerthyOfficial @immancomposer @prakashraaj @IamJagguBhai @khushsundar #Meena @sooriofficial @AntonyLRuben @dhilipaction @vetrivisuals pic.twitter.com/nJRYCNW7Kn
— Sun Pictures (@sunpictures) October 26, 2021