கேலரி
உலகம் சுற்றும் வாலிபனாக தல அஜித்… வைரல் புகைப்படம்…
தல அஜித் நடித்து முடித்துள்ள வலிமை திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தல அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் அடுத்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
சினிமா மட்டுமின்றி துப்பாக்கி சுடுவது, ரிமோட்டில் குட்டி ஹெலிகாப்டர் இயக்குவது, பைக் மற்றும் கார் ரேஸில் கலந்து கொள்வது, பைக்கில் தனியாக நீண்ட தூரம் பயணிப்பது, புகைப்படங்கள் எடுப்பது என பல விஷயங்களில் ஆர்வம் உள்ளவர் அஜித்.
சமீபத்தில் தனியாக பைக்கில் இந்தியா – பாகிஸ்தான் எல்லை வரை சென்று வந்தார். இந்தியாவின் ராணுவ வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தல அஜித்துடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது.
தற்போது பி.எம்.டபிள்யூ பைக்கை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டார் தல அஜித். ஒரு அனாந்திர காட்டில் வெயிலில் சுடும் மணலில் அவர் பைக்கின் நிழலில் அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
சமீபத்தில், உலகை பைக்கால் சுற்றி வந்த பெண்ணை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.