சினிமா
வா சாமி…பற்றி எரியும் நெருப்பு போல… அண்ணாத்த படத்தின் அடுத்த பாடல் ரிலீஸ் அறிவிப்பு…
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான திரைப்படம் ’அண்ணாத்த’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரீலீஸுக்கு தயாராகி வருகிறது. வரும் தீபாவளியன்று அதாவது நவம்பர் 4ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தில் இடம் பெற்ற அண்ணாத்த அண்ணத்தன், சாரக்காற்றே மற்றும் மருதாணி என 3 பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் வ்ரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற ‘வா சாமி…பற்றி எரியும் நெருப்பு போல’ என்கிற பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.
‘அண்ணாத்த’திரைப்படத்தில் ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராப், ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், வேல ராமமூர்த்தி, சூரி, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு டி. இமான் இசையமத்துள்ளார். இன்னொரு விஸ்வாசம் திரைப்படம் இப்படம் ரசிகர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.