Connect with us

விமர்சனம்

விநோதய சித்தம் – விமர்சனம்

Published

on

பரசுராம் (தம்பி ராமைய்யா) மிகவும் கண்டிப்பானவர். எல்லாம் சரியாக நேரத்துக்கு நடக்க வேண்டும் என நினைப்பவர். தன்னைச் சார்ந்து இருக்கும் தன் மனைவி, இரண்டு மகள்கள், ஒரு மகனுக்குத் தன்னால்தான் எல்லாம் செய்து வைக்க முடியும் அவர்களுக்கு எதுவும் தெரியாது என நினைப்பவர். மிகப்பெரிய கம்பெனியில் மிக முக்கியமான பொறுப்பில் இருக்கிறார்.

தனது 25-வது திருமண நாளைக் கொண்டாடவிருக்கும் நிலையில் திடீரென நடக்கும் விபத்தில் மரணமடைகிறார். அவரை அழைத்துச் செல்ல காலன் வரும்போது தான் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கிறது என்னால் தற்போது வர முடியாது என்கிறார். எவ்வளவு காலம் வேண்டும் எனக் கேட்கும் காலனிடம் 10 ஆண்டுகள் கேட்க இல்லை இல்லை 90 நாட்கள் மட்டுமே தர முடியும் என்கிறார் காலன். அந்த 90 நாட்களில் பரசுராமின் நடக்கும் நிகழ்ச்சிகள்தான் விநோதய சித்தம்…

வேகமாகப் பயணிக்கும் வாழ்க்கையில் எல்லாம் தன்னால்தான் ஆகும் என நினைத்துக்கொண்டிருக்கும் சூழலில் எதுவும் நம்மால் இல்லை. காலத்தால் நிர்ணயிக்கப்பட்டதை நாம் செயல்படுத்துகிறோம். யாரும் யாருடை வாழ்க்கையிலும் ஏதும் செய்ய முடியாது என்பதைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சமுத்திரக்கனி. அதற்கான காலமாக 1.37 மணி நேரத்தை வகுத்துக்கொண்டது இந்தப் படத்தின் மிகப்பெரிய ப்ளஸ்…

பரசுராமாக தம்பி ராமையா விபத்துக்கு முன் மிடுக்கான, எல்லாம் தான்தான் என்ற தோரணையில் இருக்கும்போது விபத்து முடிந்து ஒவ்வொரு நிகழ்ச்சியைப் புரிந்துகொள்ளும்போது அசத்தியிருக்கிறார். வழக்கமான இவரது மிகை நடிப்பு ஆங்காங்கே எட்டிப்பார்க்கிறது என்றாலும் உறுத்தலாக இல்லை என்பது மிகப்பெரிய ஆறுதல். இவர் தவிரக் காலனாக சமுத்திரக்கனி. சும்மாவே அட்வைஸை அள்ளி வீசும் சமுத்திரக்கனி தன் படம் என்பதாலேயோ என்னவோ கொஞ்சம் அடக்கியே வாசிக்கிறார். பெரும்பாலும் இவரது கருத்துகள் எல்லாம் இன்றைய காலகட்டத்தில் எல்லோரும் கடந்து வருவதுதான் என்பதால் பல இடங்களில் பலரும் இந்தக் கருத்துகளோடு ஒன்றிப் போவார்கள். ஆனால், இது 80-களின் குழந்தைகளுக்கு மட்டும்தான் பொருந்தும். மற்றவர்களுக்கு க்ரிஞ்ச் தனமாகத்தான் இருக்கும். ஸ்ரீரஞ்சனி, முனீஷ் காந்த், ஜெயப்பிரகாஷ், சஞ்சிதா ஷெட்டி இந்தப் படத்தின் மற்ற கதாபாத்திரங்களும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள்.

அரண்மனை – 3 படத்திற்கு இசையமைத்த சி. சத்யாதான் இந்தப் படத்திற்கும் இசை. கேள்விப்பட்ட வரை அரண்மனை – 3-க்கான இசை கொஞ்சம் மொக்கை என விமர்சனங்கள் வருகின்றன. ஆனால், இதில் ஓகே.தான். இதில் சொல்லப்படும் எல்லாமே சரிதான் என்றாலும் மேலே சொன்னது மாதிரி அனைவருக்குமான படம் இல்லை. கதை சொன்ன விதம் மற்ற அறிவுரைப் படங்களிலிருந்து மாறுபட்டிருப்பது இதனுடைய ஒரு சிறப்பு அவ்வளவுதான்.

கொஞ்சம் நாடகத்தனமாக, அறிவுரை சொல்வதைக் கேட்கத் தயாராக இருக்கிறீர்கள் என்றால் நிச்சயம் இந்தப்படம் உங்களுக்கானது தான். ஆனால், இளைஞர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறுவது கொஞ்சம் சிரமம்தான். ஓடிடி-தானே பார்த்துவிட்டுப் போக வேண்டியதுதான். என்ன கெட்டுவிடப் போகிறது.

செய்திகள்10 நிமிடங்கள் ago

தமிழ்நாடு உருவான வரலாறு: ஒரு சுருக்கமான பார்வை

வணிகம்18 நிமிடங்கள் ago

நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தங்கம் விலை கணிசமாக குறைந்தது! (18/07/24)

செய்திகள்30 நிமிடங்கள் ago

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு.. துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதலுக்கு டெண்டர் வெளியீடு!!

இந்தியா9 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்9 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்11 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்11 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு12 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்12 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!