Connect with us

இந்தியா

ஐஆர்சிடிசி இணையதளத்தில் பேருந்து டிக்கெட்டுக்கள் முன்பதிவு: இன்று முதல் அமல்!

Published

on

ஐஆர்சிடிசி இணையதளத்தில் இதுவரை ரயில் நிலைய டிக்கெட்டுகள் மற்றும் விமான டிக்கெட்டுகள் மட்டும் முன்பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது பேருந்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐஆர்சிடிசி எனப்படும் இந்தியன் ரைல்வே கேட்டரிங் அண்ட் டூரிஸம் கார்ப்பரேஷன் இணையதளம் மற்றும் செயலி மூலம் ரயில் டிக்கெட், விமான டிக்கெட், சுற்றுலா பேக்கேஜ் ஆகிய டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வந்த நிலையில் தற்போது மேலும் ஒரு வசதியாக பேருந்துகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே ஒரு லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டு மூலம் பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதியை ஐஆர்சிடிசி இணையதளம் அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடதக்கது. ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் செயலி மூலம் 22 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக சோதனை முறையாக இருந்த பேருந்து முன்பதிவு இன்று முதல் அமல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஐஆர்சிடிசி இணையதளத்தில் பேருந்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு https://www.bus.irctc.co.in/home என்ற இணையதளத்திற்கு சென்று எந்த ஊரிலிருந்து எந்த ஊருக்கு பயணம் செய்ய வேண்டும்? எந்த பேருந்தில் பயணம் செய்ய வேண்டும்? என்பது குறித்த தகவல்களை அறிந்து கொண்டு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இதுகுறித்த அறிவிப்பை ஐஆர்சிடிசி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அரசு பேருந்துகள் மட்டும் என்று தனியார் பேருந்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ள முடியும் என்றும் இதற்காக நாடு முழுவதும் 50 ஆயிரம் பேருந்து ஆபரேட்டர்களுடன் ஐஆர்சிடிசி இணைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பேருந்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது எந்தவிதமான கூடுதல் கட்டணமும் கிடையாது என்றும் பேருந்துகளின் கட்டணத்தை மட்டுமே செலுத்தினால் போதும் என்றும் ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது. பேருந்து, விமான மற்றும் ரயில் நிலைய டிக்கெட்டுகளை சுலபமாக முன்பதிவு செய்து கொள்ள வசதி செய்து கொடுத்த ஐஆர்சிடிசி நிர்வாகத்திற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு15 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா16 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு16 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்16 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!