தமிழ்நாடு
8ஆம் வகுப்பு தனித்தேர்வு தேதி அறிவிப்பு!
எட்டாம் வகுப்புக்கான தனி தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த தேர்வை எழுதும் மாணவர்கள் தற்போது சுறுசுறுப்பாகி உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து விட்டதி அடுத்து தள்ளி போடப்பட்ட தேர்வுகள் மீண்டும் நடத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் எட்டாம் வகுப்பு தனித்தேர்வு தேதியை அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது
இதன்படி எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான பொதுத் தேர்வு நவம்பர் 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெறும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இந்த தேர்வு குறித்து கூடுதல் விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை ஆகிய விவரங்களுக்கு https://www.dge.tn.gov.in/ என்ற இணைய தளங்களை அணுகலாம் என்றும் அதில் அனைத்து விவரங்களும் குறிப்பிடப்பட்டிருக்கும் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.